லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 490க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் லெபனான் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு, வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் விமானப்படை ஹெஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.
அதன்படி, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 490க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1,600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
லெபனான் மற்றொரு காஸாவாக மாறுவதை தாம் விரும்பவில்லை என, தொடர் தாக்குதல்களால் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post