ஹெலன் புயல் அமெரிக்காவில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
ஹெலன் புயல் அமெரிக்காவின் புளோரிடா அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்ததால், புளோரிடாவில் கனமழை பெய்தது மற்றும் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
ஹெலன் சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 56 பேர் மழை மற்றும் வெள்ளத்தால் இறந்துள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினாஸில் 30 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாமல், வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
புளோரிடாவின் கல்வி நிறுவனங்கள் விடுமுறை, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக 10 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அதிபர் ஜோ பைடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹெலன் புயல் அமெரிக்காவில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post