தாய்லாந்தில் பள்ளி பேருந்து தீ விபத்தில் 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் உதய் தானி மாகாணத்தில் இருந்து தலைநகர் பாங்காக்கிற்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். பஸ் பாங்காக் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பேருந்தில் இருந்த 25 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 16 மாணவர்கள், 3 ஆசியர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் படோங்டெர்ன் ஷினவத்ரா, உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு தாயாக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
Discussion about this post