மத்திய இஸ்ரேலில் நடுத்தர தூர ஏவுகணை தாக்குதல் ஆரம்பம் என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மற்றவர்களை மீட்கும் நோக்கத்தில் காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.
காஸா பகுதியில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலில் 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் தாக்கப்படுகிறது. இதனால், இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில், ஒருவர் பின் ஒருவராக பலர் பலியாகினர். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, இஸ்ரேல் ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷுகரை தாக்கி கொன்றது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை இஸ்ரேல் ராணுவம் தாக்கி கொன்றது. எனினும், இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை செப்டம்பர் 28ம் தேதி ஹிஸ்புல்லாவும் உறுதிப்படுத்தினார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் புனிதப் போரைத் தொடர அந்த அமைப்பு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் தடுப்பு மையத்தின் தளபதியும் அவர்களின் செயற்குழு உறுப்பினருமான நபில் கவாக்கை இஸ்ரேல் ராணுவம் தாக்கி கொன்றது. ஹெஸ்புல்லா தளபதிகளை கொல்ல தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
நஸ்ரல்லாவின் மரணத்துடன், நயீம் காசிம் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைப் பொதுச்செயலாளராக செயல்படுவார் என்று அறிக்கை கூறுகிறது. காசிம், ஹிஸ்புல்லாஹ்வின் பிரதித் தலைவரான பின்னர் தனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்தால், லெபனானைப் பாதுகாக்க ஹெஸ்புல்லா போராளிகள் போராடத் தயாராக உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என உறுதி அளித்துள்ள அவர், நீண்ட கால போருக்கு தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், லெபனான் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. அவர்கள் லெபனானுக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், லெபனானுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்ததாக வெளியான தகவல் பொய்யானது என ஹிஸ்புல்லாவின் செய்தி தொடர்பாளர் மொஹமட் அபிபி தெரிவித்துள்ளார். லெபனானுக்குள் நுழைய முயற்சிக்கும் எதிரிப் படைகளை நேரடியாக எதிர்கொள்ள ஹிஸ்புல்லா போராளிகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹிஸ்புல்லா மத்திய இஸ்ரேலில் நடுத்தர தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், இது ஆரம்பம் மட்டுமே.
Discussion about this post