வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களைப் பாதுகாக்கக் கோரி சனாதன் ஜாகரன் மஞ்சா சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தி சனாதன் ஜாகரன் மஞ்சா சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. சட்டோகிராம் பகுதியில் தொடங்கிய இந்த மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post