WhatsApp Channel
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுவில் நடக்கிறது.
இந்தப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேசம் களமிறங்க, தொடரை இழப்பதைத் தவிர்க்க நியூசிலாந்து கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Discussion about this post