தென்னாப்பிரிக்கா அணியின் அபார வெற்றி – ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது லீக் போட்டி கராச்சியில் நடைபெற்றது, இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்து பாரிய ஸ்கோரை பதிவு செய்தது.

316 ரன்கள் என்ற வெற்றிக்கான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால், எதிர்ப்பார்த்த அளவுக்கு ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது.

Facebook Comments Box