ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல என்று மத்திய சட்ட அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், மத்திய சட்ட அமைச்சகம் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த மத்திய சட்ட அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், இந்தியாவின் கூட்டாட்சி சீர்குலைக்கப்படாது என்று சட்ட அமைச்சகத்தின் வரைவு குழு தெளிவுபடுத்தியுள்ளது என்று சட்ட அமைச்சகத்தின் வரைவு குழு தெளிவுபடுத்தியுள்ளது.
Facebook Comments Box