காஸாவில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000 கடந்து அதிர்ச்சி!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டைக் கடந்தும் நீடிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்கின்றது. கடந்த ஜனவரியில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் பல பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற இஸ்ரேல் அரசின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது.

இதன் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காஸா நகரில் இரவு நேரங்களில் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்திய தாக்குதலில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதல்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த பரவலான உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அனைத்துலக சமூகம் இந்த போருக்கு விரைவில் முடிவுக்கட்ட வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

Facebook Comments Box