வட இந்தியர்கள் குறித்து தமிழக அமைச்சர்கள் செய்த கருத்து வெளியீடுகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் பரப்பப்படும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுக்கு தொடர்பாக, ஹெச். ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வட இந்தியர்களை பற்றிக் கூறிய கருத்துகள், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும் என்று கூறினார்.

மேலும், திமுக அமைச்சர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவை தமிழகத்தில் இருந்து வெளியேற்றப் போவதாகவும் ஹெச். ராஜா தெரிவித்தார்.

Facebook Comments Box