100 நாள் வேலைத் திட்ட நிதி விநியோகத்தில் தமிழகத்துக்கு அதிக பங்குமா? – மத்திய அரசின் விளக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிலுவைத் தொகை குறித்து, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். தமிழகம் அத்தொகைக்காக இன்னும் காத்திருக்கிறது என அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, நடப்பாண்டில் தமிழகத்திற்கு ரூ. 7,300 கோடி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது, கடந்த நிதியாண்டில் உத்தரப்பிரதேசத்துக்கு வழங்கியதை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

7 கோடி மக்கள் தொகையுள்ள தமிழகம் ரூ. 10,000 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாகவும், 20 கோடி மக்கள் தொகையுள்ள உத்தரப்பிரதேசம் சுமார் ரூ. 10,000 கோடி மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

ஆகையால், நிதி விநியோகத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Facebook Comments Box