மும்பையில் திடீரென படுகுழியில் ஒரு கார் சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த வாரம் முதல் மராட்டிய மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், மும்பை உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை பருவமழை தொடங்கியது.
பலத்த மழை காரணமாக மும்பையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள் மற்றும் தடங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மும்பை காட்கோபர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென ஒரு பள்ளத்தில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒரு கார் மூழ்கி சில நிமிடங்களில் படுகுழியில் மறைந்து போவதைப் பார்த்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படுகின்றன.
Facebook Comments Box