அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘DNA’ திரைப்படம் வரும் ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இறுதிகட்ட பணிகள் தாமதமானதனால், இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, இப்படம் ஜூன் 20-ம் தேதிக்கு வெளியீடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் நிலையில், படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப்படம் திரை உலகத்தினரால் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘DNA’ திரைப்படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்புச் சிறப்புரிமைகள் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இதர எல்லா உரிமைகளும் ஏற்கனவே விற்றுவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் தற்போது லாபநிலையிலிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments Box