விராட் கோலி ஓய்வு தொடர்பாக ரவி சாஸ்திரி தெரிவித்த போது, “முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடமே இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் தான் விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன்சி வழங்கியிருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் ஓய்வு எடுத்த பின்னர், கேப்டன்ஷிப் மீண்டும் விராட் கோலியிடம் வந்திருக்க வேண்டும் என பலரும் கருதினர். கூடவே, இங்கிலாந்து தொடரில் கேப்டன்சி கிடைத்திருந்தால், கோலி டெஸ்ட் தொடர்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படியொரு திட்டம் இல்லாததால், தொடர விருப்பமின்றி, கோலி ஓய்வு அறிவித்துவிட்டதாக தெரிகிறது.
2017 முதல் 2021 வரை, ரவி சாஸ்திரியுடன் இணைந்து விராட் கோலி பணியாற்றிய காலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பொற்காலமாகவே பார்க்கப்படுகிறது. ஒரே குறையாக ஐசிசி கோப்பை வெற்றியின்மையைக் குறிப்பிடலாம். ஆனால், தோனி ஐசிசி கோப்புகளை வென்றாலும், வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் அனுபவித்த தோல்விகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. அந்த நிலைமையிலிருந்து மீட்டது விராட்-சாஸ்திரி கூட்டணிதான்.
இந்த சூழ்நிலையில், விராட் கோலியின் ஓய்வு விவகாரம் சிறப்பாக கையாண்டிருக்க வாய்ப்பு இருந்தது எனச் சாஸ்திரி நினைக்கிறார்.
“ஒருவர் ஓய்வு பெற்ற பின் தான், அவர் விளையாட்டு உலகில் விட்டுள்ள தாக்கத்தை உணர முடிகிறது. கோலியின் ஓய்வு எனக்குக் கண்ணீரைக் கிளப்பியது. குறிப்பாக அவர் சென்ற பாணி வருத்தமளிக்கிறது. இது இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டியதுதான்.
அவரிடம் மேலும் நேர்முகமாகப் பேசி, உறுதியான முடிவெடுக்கச் செய்திருக்கலாம். நான் பதவியில் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் நேரடியாக அவரை மீண்டும் கேப்டனாக்கியிருப்பேன். புள்ளி விவரங்கள் விராட் கோலியின் திறமையை முழுமையாக காட்டாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தின் பிரதிநிதியாக செயல்பட்டார்.
வெளிநாட்டு மண்ணில் அவரது வீரமும், வழிநடத்தும் திறனும் அபூர்வமானவை. அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமை அளிக்கிறது. அந்த வெற்றிகளுக்குத் துணையாக இருந்ததற்கும் நன்றியுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் சாஸ்திரி.
அகார்க்கர் கூறுவதாவது, ஏற்கனவே ஏப்ரலிலேயே கோலி ஓய்வு குறித்து மனதில் முடிவெடுத்ததாகச் சொன்னதாகும். “தான் எண்ணிய காலம் இதுதான்” எனவும் அவர் முடிவெடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால், எப்படியாயினும் கம்பீரின் நுழைவு தான் கோலியின் டெஸ்ட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போலவே தெரிகிறது.