பிரபல இந்தி நடிகரான ஆமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இந்த திரைப்படத்தை ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். இதில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை னிவாஸ் ரெட்டி மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியில் உருவாக்கப்பட்ட இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது. தற்போது, இதன் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மனநலக் குறைவுடன் வாழும் சிறார்களுக்கு கூடைப்பந்து பயிற்சியாளராக நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நியமிக்கப்படுகிறார் ஆமிர்கான். அவர் அங்கே சந்திக்கும் சவால்களையும், συν உணர்ச்சிபூர்வமான அனுபவங்களையும் பதிவு செய்கிறது இந்த படம்.