கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வில், கொரோனா நோயாளிகளுக்கு குணம் அடைந்து 3 மாதங்கள் ஆனப் பிறகும், சிலருக்கு இன்னும் நீண்ட காலம் ஆன பின்னரும் நுரையீரல் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நுரையீரல் பாதிப்பு வழக்கமான சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுவதில்லை என்றும் இதனால் நோயாளிகளிடம் அவர்களது நுரையீரல் இயல்பாக இயங்குவதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ‘ரேடியலாஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகள், நீண்ட கால மூச்சு திணறலை அனுபவிக்கிறபோது, அவர்களது நுரையீரலும் இதுபோன்று சேதம் அடையக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments Box