பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

0

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இல், நேற்று அகமதாபாத்தில் நடந்த இறுதியான லீக் போட்டியில் யு மும்பா டிடி மற்றும் தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. ஐந்து ஆட்டங்களைக் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற மதிப்பெண் கணக்கில் வெற்றி பெற்றது.

லீக் சுற்றுகள் முடிவில், தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்ளிகளுடன் முதலிடத்தை, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி அதே 44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை, யு மும்பா அணி 42 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை, மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 41 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்தனர். இந்நான்கு அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்குள் முன்னேறின.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி டிடிசி மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஜூன் 14ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here