டபிள்யூடிசி (WTC) இறுதிப் போட்டி: தென் ஆப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக பதிலடி கொடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களில் அவுட் செய்தது. ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தலான பந்து வீச்சுடன் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு சுருண்டது. பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்காவுக்காக ரபாடா 5 விக்கெட்களும், யான்சன் 3 விக்கெட்களும் எடுத்தனர்.
பதிலுக்கு பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே விக்கெட்கள் இழந்து பின்னடைவு கண்டது. கேப்டன் பவுமா 36 ரன்களும், பெடிங்ஹாம் 45 ரன்களும் எடுத்தனர். ஆனால் பாட் கம்மின்ஸின் தீவிர ஆட்டத்தில் அந்த அணியும் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மீண்டும் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 74 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்கள் வேகமாக விழுந்தன. கவாஜா, கிரீன், ஸ்மித், வெப்ஸ்டர், கம்மின்ஸ் குறைந்த ரன்களில் அவுட் ஆனனர். எனினும், அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா மற்றும் நிகிடி தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவுக்கு 218 ரன்கள் முன்னிலை இருப்பது இந்த ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. இரண்டு நாட்களில் 28 விக்கெட்கள் வீழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.