யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் கால் பதித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி!

0

யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6: முதல் அரைஇறுதியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியால் தபாங் டெல்லிக்கு அதிர்ச்சி தோல்வி

அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற யுடிடி சீசன் 6-ன் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் தொடக்கமாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் الموا المواதில் தபாங் டெல்லியின் சிங்கப்பூரை சேர்ந்த க்யூக் இசாக், அமெரிக்காவைச் சேர்ந்த கனக் ஜாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கனக் ஜா 2-1 (7-11, 11-10, 11-3) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

அடுத்து நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா சியாவோ (தபாங் டெல்லி), நெதர்லாந்தின் பிரிட் ஈர்லாண்டை (ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்) எதிர்கொண்டார். இதில் மரியா சியாவோ 2-1 (6-11, 11-6, 11-8) என்ற கணக்கில் வென்று, போட்டியை 3-3 என சமநிலையில் கொண்டுவந்தார்.

மூன்றாவது ஆட்டமான கலப்பு இரட்டையர் போட்டியில், டெல்லியின் மரியா சியாவோ – சத்தியன் ஞானசேகரன் ஜோடி, ஜெய்ப்பூரின் பிரிட் ஈர்லாண்ட் – ஜீத் சந்திரா ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டெல்லி ஜோடி 2-1 (8-11, 11-9, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில், தபாங் டெல்லியின் சத்தியன் ஞானசேகரன் மற்றும் ஜெய்ப்பூரின் யஷான்ஷ் மாலிக் மோதினர். இதில் யஷான்ஷ் 2-1 (11-10, 11-9, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை மீண்டும் சமநிலைக்கு (6-6) கொண்டுவந்தார்.

நிறைவு மற்றும் முடிவை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், தபாங் டெல்லியின் தியா சித்தலே, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவை எதிர்கொண்டார். இந்த பரபரப்பான ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 2-1 (11-6, 6-11, 11-9) என்ற செட் கணக்கில் தியா சித்தலேவைக் தோற்கடித்து தனது அணியை 8-7 என வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 8-7 என்ற நெருக்கடியான கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

இந்நிகழ்வில், இன்று (ஜூன் 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், யு மும்பா அணியை எதிர்கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேற முயற்சிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here