இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

0

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

இஸ்ரேலும், ஈரானும் தங்களுக்குள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் சூழ்நிலையில், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் ஒரே நாளில் இரு முறை தாக்குதல் நடத்தியதற்குப் பதிலளிக்க, ஈரான் கடந்த நேற்று ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேலின் ராணுவத் தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் நேரடியாக போரில் ஈடுபட தொடங்கியுள்ளன. இஸ்ரேல், ஈரானை தொடர்ந்து தாக்கி வருவதால், ஈரான் மற்றும் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பதிலடி தாக்குதல்களின் தாக்கமாக, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 டாலர் உயர்ந்து, 78 டாலராகி கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே நிலையை எட்டியது. பின்னர் விலை 74 டாலராக குறைந்தது. இருப்பினும், இந்தப் போரின் தீவிரம் மேலும் அதிகரித்தால், எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறுகையில், “இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்குப் பிரதான காரணம் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறதா என்பதுதான். முந்தைய முறை இரு நாடுகளும் தாக்குதல்களில் ஈடுபட்ட போதும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்பதால் விலை பின்னர் குறைந்தது,” என்றார்.

ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்றாலும், நாட்டின் மொத்த எண்ணெய் தேவையின் 80% வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடருமானால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

அதிலும் முக்கியமாக, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20% அளவிலான கச்சா எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து செல்கிறது. இது ஈரானுக்கு வடக்கே அமைந்துள்ளது. எனவே, இங்கு எந்தவொரு தடையும் ஏற்பட்டால், ஈராக்க், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேடுகளிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here