முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன்

0

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6:

ஜூன் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யு மும்பா டிடி மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் தொடக்க ஆடவர் ஒற்றையர் போட்டியில், யு மும்பாவின் பிரான்ஸ் வீரர் லிலியன் பார்டெட், அமெரிக்காவின் கனக் ஜாவின் எதிராக ஆடியார். இதில் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என வெற்றி பெற்றார்.

மீண்டும், மகளிர் ஒற்றையர் போட்டியில் யு மும்பா அணியின் ருமேனிய வீராங்கனை பெர்னாடெட் சாக்ஸ், ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதினார். இதில் பெர்னாடெட் 2-1 (11-9, 10-11, 11-5) என களத்திலே வெற்றி பெற்றார்.

பின்னர், கலப்பு இரட்டையர் போட்டியில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் மற்றும் ஆகாஷ் பால் ஜோடி, ஜெய்ப்பூர் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து) மற்றும் ஜீத் சந்திரா ஜோடியை நேருக்கு நேர் எதிர்கொண்டது. இப்போட்டியில் யு மும்பா ஜோடி 3-0 (11-6, 11-5, 11-5) என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது. இதனால், யு மும்பா 7-2 என முன்னிலை பெற்றது.

அடுத்த ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், யு மும்பா வீரர் அபிநந்த் பிபி மற்றும் ஜெய்ப்பூர் வீரர் ஜீத் சந்திரா மோதினர். இதில் ஜீத் சந்திரா தொடக்க இரு செட்டுகளையும் (11-5, 11-8) வென்றார். ஆனால் கடைசி செட்டில் அபிநந்த் 11-8 என வெற்றி பெற்று, யு மும்பா அணிக்கு 8-4 என வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றி மூலம் யு மும்பா அணிக்கு அதன் முதல் சாம்பியன் பட்டம் கிடைத்தது. அபிநந்த் தமிழ்நாட்டின் திருவான்மியூரைச் சேர்ந்தவர்.

UTT சீசன் 6 போட்டியின் விதிமுறைப்படி, 8 புள்ளிகளை முதலில் அடையும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். எனவே, 4-வது ஆட்டத்துக்குப்பிறகு யு மும்பா வெற்றியை உறுதி செய்ததால், கடைசியாக நடைபெற இருந்த மகளிர் ஒற்றையர் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த ஆட்டத்தில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோர்படே, ஜெய்ப்பூர் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் மோதுவதாக இருந்தது.

வெற்றி பெற்ற யு மும்பா அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ரூ.40 லட்சம் பரிசைப் பெற்றது. அரைஇறுதியில் தோல்வியடைந்த தபாங் டெல்லி மற்றும் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் தலா ரூ.17.5 லட்சம் பரிசை பெற்றன.

மற்ற விருதுகள்:

மதிப்புமிக்க வீரராக இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் (டெம்போ கோவா சாலஞ்சர்ஸ்) தேர்வானார். சிறந்த வீராங்கனையாக யு மும்பாவின் பெர்னாடெட் சாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“ஷாட் ஆஃப் தி சீசன்” விருது, கொல்கத்தா தண்டர் பிளேட்ஸின் புயர்ட்டோ ரிக்கோ வீராங்கனை அட்ரியானா டயஸுக்கு வழங்கப்பட்டது (அவள் கிருத்விகா ராயுடன் டெம்போ கோவா சாலஞ்சர்ஸுக்கெதிராக ஆடிய ஆட்டத்தில் பெற்ற புள்ளிக்காக).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here