லாலு பிரசாத்தின் 78வது பிறந்த நாள் கடந்த வாரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வின் போது வெளியான வீடியோவில், உடல்நிலை நலமில்லாத லாலு ஒரு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள மற்றொரு சோபாவில் தனது கால்களை நீட்டிக்கொண்டிருப்பது காணப்பட்டது.

அந்நேரத்தில், ஒரு ஆதரவாளர் அம்பேத்கரின் படத்தை லாலுவின் கால்களுக்கு அருகில் வைத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதை நடந்ததாகவும், இதற்காக லாலுவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டும், பீகார் எஸ்சி ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Facebook Comments Box