இயக்குநர் மகிழ் திருமேனிக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்த திரைப்படம் ‘தடையறத் தாக்க’.
இந்தப் படத்தில் அருண் விஜய், மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் வெளியீடுக்கு தயாராகிறது.
இதன் திரைப்பதிவை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. புதிய 4K தொழில்நுட்பத்தில் படம் மேம்படுத்தப்பட்டு, ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை ஒரு சாதாரண இளைஞனைச் சுற்றி சுழல்கிறது.
வாழ்க்கையில் போராடி முன்னேறிய அந்த இளைஞன், ஒருவருக்குச் சிறிய உதவியளிக்க முயற்சிக்கிறான். ஆனால், எதிர்பாராதவிதமாக, அவன் பெரும் கும்பலான ரவுடிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவர்களிடம் இருந்து அவன் தப்பித்துவிட்டானா என்றதே படத்தின் முக்கிய அம்சம்.
இசையமைப்பாளர் தமன் இழைத்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.
Discussion about this post