இந்தி நடிகை கஜோல் தற்போது ‘மா’ என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த ஹாரர் படத்தை விஷால் புரியா இயக்கியுள்ளார், மேலும் இது வரும் 27ம் தேதி வெளியிடப்படுகிறது.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற கஜோல், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அந்த இடம் பேய்கள் நிறைந்த இடத்துக்கான சிறந்த உதாரணம் என கூறினார். இந்தக் கருத்து விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, தனது விளக்கத்தில் கஜோல் கூறியதாவது: “நான் நடித்த பல படங்களின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. அங்கு நான் பலமுறை தங்கியுள்ளேன். படம் எடுக்க ஏற்ற சூழல் அங்கு உள்ளது. குடும்பத்தினரும், குழந்தைகளும் கூட வசிக்கும்படியாக பாதுகாப்பான இடம் அது” என தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box