இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து அணி முதல்இன்னிங்ஸில் ஆடி கொண்டிருந்தது. அந்த நேரத்தில், 61-வது ஓவரில் பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டதாக இந்திய அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் கவலை தெரிவித்தார். பந்தை பரிசோதித்த நடுவர், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறி பந்தை மாற்ற மறுத்தார். இதனால் கோபமடைந்த ரிஷப் பந்த் பந்தை மைதானத்தில் தூக்கி வீசியார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடுவர்கள் கிறிஸ் கஃபானி, பால் ரீஃபல், மூன்றாவது நடுவரான ஷர்புதுலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது நடுவரான மைக் பர்ன்ஸ் ஆகியோர், ஐசிசி ரெஃப்ரீ ரிச்சி ரிச்சர்ட்சனிடம் புகார் அளித்தனர். அதன் பின்னர், நடுவரின் தீர்ப்பில் எதிர்ப்பை தெரிவித்ததால், ரிஷப் பந்துக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box