தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘குபேரா’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேகர் கமுலா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம், தமிழில் கலவையான விமர்சனங்களையும், தெலுங்கில் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தப் படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் இந்தியாவில் ரூ.14 கோடி வசூலித்த இந்த படம், இன்று புதன்கிழமையில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை விட தெலுங்கு பேசும் மாநிலங்களில் இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் இப்படத்தின் வெற்றி விழாவும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Facebook Comments Box