நடிகர் கமல் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா ஆகியோர் அடுத்தடுத்து விலகியுள்ள சம்பவம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்பு செயலாளராக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதிவி அளிக்கப்பட்டது. இதனிடையே கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளராக இருந்தவர் பத்மபிரியா. இவர் சமீபத்தில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பத்மபிரியா கட்சியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ம.நீ.ம.வில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் வெளியேறினார். தற்போது அடுத்தடுத்து கமல் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியின் தலைவருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
Facebook Comments Box