இளம் கால்பந்து திறமைகளை வளர்க்கும் நோக்கில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து, இந்தியாவின் பல பகுதிகளில் கால்பந்து அகாடமிகளை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள எஸ்டிஏடி மைதானத்தில் ஜூன் 29 மற்றும் 30 தேதிகளில் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆண்கள் 2012-ம் ஆண்டில் பிறந்தவர்களாகவும், பெண்கள் 2010 மற்றும் 2011-ல் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆண்கள் தேர்வு ஜூன் 29-ம் தேதி காலை 7 மணிக்கு, பெண்கள் தேர்வு ஜூன் 30-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box