ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

நார்வேயைச் சேர்ந்த ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

Facebook Comments Box