டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த முன்தினம் திருநெல்வேலியில் நடந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் எதிரேதிராக மோதின. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் பெற்றது. அவர்களுக்காக சரத் குமார் 37, அதீக் உர் ரஹ்மான் 30, சரவணன் 17, மற்றும் குர்ஜப்னீத் சிங் 17 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணியின் பந்து வீச்சில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் சரவணகுமார் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 132 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கேப்டன் சுரேஷ் குமார் 44, ராஜ்குமார் 37 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி அணி, இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 6 போட்டிகளில் கலந்து கொண்ட அவர்கள் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளனர். மற்றொரு புறம், மதுரை அணி இதுவரை நான்காவது முறையாக தோல்வி கண்டுள்ளது.

Facebook Comments Box