உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபர் தாக்கம்: சமூக விரோத நெருக்கடி

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்து வந்த முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவருடைய உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் முகுட்மணியின் தலைமுடி வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் பிராமணர்கள் அல்லாத காரணத்தால் முகுட்மணி கதாகாலட்சேபம் செய்யக் கூடாது என கூறி சிலர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில், முகுட்மணி மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவரது சாதியைப் பொய்யாக கூறியதாகும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மற்றொரு பிரபல கதாகாலட்சேபர் லவ்லி சாஸ்திரி கூறியதாவது: “முகுட்மணிக்கு எதிரான இந்த தாக்குதல் யாதவ சமூகத்தையே இழிவுபடுத்தும் செயல். யாதவர்களும் கதாகாலட்சேபத்தில் ஈடுபடத் தொடங்கியதால் சிலர் பொறாமையில் உள்ளனர். யாதவர்கள் தங்களுடைய சமூகவழக்குகளை தாங்களே மேற்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைமையகம் அழைத்து முகுட்மணிக்கு மரியாதை செலுத்திய அகிலேஷ் யாதவ், “சமூக ஆதிக்கம் கொண்டு சிலர் கலைஞர்களை அடக்க முயலுகிறார்கள். லக்னோவில் பெரும்பான்மையினர் வாழ்ந்தாலும் ஆட்சி ஒரு சிறுபான்மை சமூகத்திடம் உள்ளது – இது எப்படி சாத்தியமானது?” என கேள்வி எழுப்பினார்.

மற்றபுறம், உ.பி. அமைச்சரும் பாஜகவின் கூட்டணியில் உள்ள ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியதாவது: “முகுட்மணி தனது அடையாளங்களை திருத்தி பிராமணராக நடித்ததாக புகார் உள்ளது. சமூகங்களுக்கேற்ப பணிகள் உள்ளன; அவற்றை ஊடுருவி அபகரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். அகிலேஷ் முதலில் தன் குடும்பச் சடங்குகளில் பிராமணர்களை அழைப்பதை நிறுத்தட்டும்,” என விமர்சித்தார்.

இந்நிலையில், முகுட்மணிக்கு எதிரான வழக்கு எட்டாவா எஸ்பி பிரஜேஷ் ஸ்ரிவாஸ்தவாவிடம் இருந்து ஜான்சி போலீசாரிடம் மாற்றி ஒப்படைக்க உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments Box