மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பின் பேரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், ஜூலை 9-ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவலாக ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில்,

  • பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது,
  • தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு முக்கிய தொழில் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்,
  • அரசு நிறுவனங்களில் காலியான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
  • மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றவை அடங்கும். மொத்தம் 17 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெறிசோடிய திருவனந்தபுரம்
இந்த போராட்டத்திற்கு 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஆதரவு தெரிவித்திருந்தன. அதன் காரணமாக நாடு முழுவதும் சாலை மறியல்கள், ரயில் மறியல்கள், கண்டனக் கோஷங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பேரணிகள் நடைபெற்றன. கேரளாவில் போராட்டத்தால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து மட்டுமல்லாமல், தனியார் போக்குவரத்தும் பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தொலைதூர போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
கொல்கத்தாவில் நடந்த பேரணி

திருவனந்தபுரம் நகரம், வெறிச்சோடி காணப்பட்டது.

மேற்கு வங்கத்தில், இடதுசாரிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில மாவட்டங்களில் மோதல் சூழல் நிலவினாலும், மாநிலம் முழுவதும் பிரச்னைகள் தடுக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன.

டெல்லியில், போராட்டத்தின் தாக்கம் மிகக்குறைவாகவே இருந்தது. அனைத்திந்திய வர்த்தக சங்கங்களின் சார்பில் சில பகுதிகளில் போராட்டங்கள் நடந்தாலும், பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயல்புபோல செயல்பட்டன. கனோட் பேலஸ், கான் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் இயங்கின.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த சாலை மறியல்
ஓடிசாவின் புவனேஸ்வர் நகரில், சாலை மறியல்கள் நடத்தப்பட்டன.

கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில், பந்த் எதிரொலி சிறிதளவுக்கே இருந்தது. ஆனால், தொழிற்சங்க உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பி பேரணிகளில் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகதீஷ் சூர்யா, “இந்த போராட்டம் தொழிற்சங்கங்களின் படைப்பு சக்தியை அரசு உணரவேண்டியதற்கான ஒரு முயற்சி” எனக் குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா சாலை

தமிழ்நாட்டில், பெரும்பாலான இடங்களில் பொது போக்குவரத்தும், கல்வி நிலையங்களும் வழக்கம்போல இயங்கின. ஆனால், தொழிற்சங்கத்தினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடத்தினர். சென்னை முதல் தென்மாவட்டங்கள் வரை இந்தத் திருப்பங்கள் காணப்பட்டன.

விருதுநகரில், 17 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 2,312 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னையின் எழும்பூரில், எஸ்ஆர்எம்யு துணை பொதுச் செயலாளர் பால் மேக்ஸ்வெல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு, ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில் மறியல் நடைபெற்றது. இதில் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூரில், 15 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, புதுச்சேரி, அசாம், தெலங்கானா, மும்பை போன்ற நகரங்களிலும் பரவலாக பந்த் போராட்டங்கள் நடந்தன.


கடலூரில் 15 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டங்களை நடத்தின; 1500 பேர் கைது செய்யப்பட்டனர்

நடந்த சாலை மறியல் இடம் : மதுரை

புதுச்சேரியில் பெரும்பாலும் கடைகள், வணிக நிறுவனங்கள் பூட்டிகிடந்தனா…

அசாமில், தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரக்கு வாகனங்கள் ஓடாத நிலை ஏற்பட்டது. அவசர சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.

ஹைதராபாத்தில், சிவப்பு கொடிகளுடன் தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றனர். 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். சிக்கட்பள்ளி பகுதியில், போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தெலங்கானா மாநிலத்தில் நடந்த பைக் பேரணி…

தெலங்கானா மாநிலத்தில் கம்மம் நகரில் நடந்த பேரணி…
மும்பையில், வங்கித் தொழிலாளர்கள் போராட்டத்தில் சேர்ந்து பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தை ஒட்டி, கர்நாடகா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சூர்ஜேவாலா, “இந்திய தொழில் சக்தியில் 53% பேர் சமூகப் பாதுகாப்பின்றி உள்ளனர்; 80% பேர் எந்தத் தொழிற்சங்க அமைப்புக்கும் உட்படாமல் பணியாற்றுகின்றனர்; 60% தொழிலாளர்களிடம் எழுத்துப் பூர்வமான வேலை ஒப்பந்தங்கள் இல்லவே இல்லை” என்றார்.

Facebook Comments Box