பிஹாரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழுமையாகக் களத்தில்: பிரதமர் மோடி உறுதி

பிஹாரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழுமையாகக் களத்தில்: பிரதமர் மோடி உறுதி

பிஹாரை ஒரு முழுமையான முன்னேற்ற மாநிலமாக மாற்ற, மத்திய அரசு முழுத் தீவிரத்துடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹாரத்தில் பல அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் நோக்கத்துடன் நேற்று மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் வரவேற்றனர்.

மோதிஹரியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில், சுமார் ₹7,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், பாட்டணா – டெல்லி, மோதிஹரி – டெல்லி, தர்பாங்கா – லக்னோ, மால்டா – லக்னோ ஆகிய இடங்களுக்கு இடையிலான ‘அம்ருத் பாரத்’ ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கினார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

“முன்னைய காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சி நாட்கள் பிஹாருக்கான நிதியை பெரிதாக ஒதுக்காமல் புறக்கணித்து விட்டன. நிதிஷ் குமார் முதல்வராக இருந்த போதும், மத்தியத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பிஹாருக்கு தேவையான நிதி ஒதுக்காதது வரலாற்று உண்மை. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு வந்த பிறகு நிலைமையே மாறிவிட்டது. பிஹாருக்கு தேவையான எல்லா நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.”

மேலும் அவர் கூறியதாவது:

“பிஹாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே எங்களின் நோக்கம். அதற்காக மத்திய மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்து பல திட்டங்களை அதிவேகமாக செயல்படுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், முன்னாள் யுபிஏ ஆட்சியில் பிஹாருக்கு வெறும் ₹2 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதைவிட பல மடங்கு அதிக நிதி வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.”

“பிஹார் வளமாக இருந்தால்தான் இந்தியா வளமானதாகும். பிஹார் இளைஞர்கள் திறமையுடன் முன்னேறினால், பிஹாரின் வளர்ச்சியும் உறுதி. இந்நோக்கத்தில் மத்திய அரசு முழு ஆதரவுடன் செயல்படுகிறது. நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசும் இதற்காக உறுதியாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனவும் மோடி வலியுறுத்தினார்.

Facebook Comments Box