Daily Publish Whatsapp Channel
“இந்துத்வா பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் தீவிரமாகப் பதிந்திருக்கிறது” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கருத்து
இந்துத்வா என்பது பாரதத்தின் மண் மற்றும் நீரிலும் ஆழமாகக் கலந்துவிட்டது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்துத்துவா என்பது உலகளாவிய அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் ஒன்றாக இருந்தாலும், அது பலவீனத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற பிரத்யேக பேட்டியில் பேசிய அவர் கூறியதாவது:
“நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், உண்மையான அகிம்சை என்பது வலிமை உள்ளவர்களால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். இன்று நாம் ‘இந்தியரும் சீனர்களும் சகோதரர்கள்’ என்று கூறிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால், நம் நிலங்களை சீனா பறிக்க துவங்கிவிடும்.
இந்துத்வா என்பது இந்த நாட்டின் உயிரின உணர்வாகவே உள்ளதாக நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்மை செய்யும் நோக்கத்துடன் உள்ளது. ஆனால், நமது தேசத்துக்கு கேடு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிராக இது வலுவாகப் போராடும்.
இந்துத்வாவின் இத்தகைய நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தனது செயல்களில் காட்டியுள்ளார். சுர்ஜிகல் ஸ்ட்ரைக், ஏர் ஸ்ட்ரைக், மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாகும். இன்று நம் தேசத்தை பாதுகாக்க இத்தகைய ராணுவ நடவடிக்கைகள் அவசியமாகிவிட்டன,” என அவர் வலியுறுத்தினார்.