ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்! – இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உறுதி
தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் ஹெச்.வினோத்.
கே.வி.என் ஸ்டூடியோ தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் விஜய், பாபி டியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவுக்குப் பொறுப்பாக சத்யன் சூரியன் மற்றும் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு, தனுஷ் நடிக்க உள்ள மற்றொரு புதிய படத்தையும் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் இதை சாம் சி.எஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ எனும் படத்தில் இயக்குநராகவும், நாயகனாகவும் செயல்பட்டு வருகிறார். இதில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.