‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்’ – வீடு தேடி ஸ்டிக்கர் ஒட்டும் தவெக பிரசாரம்

‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்’ – வீடு தேடி ஸ்டிக்கர் ஒட்டும் தவெக பிரசாரம்

“மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகத்துடன், தமிழகம் முழுவதும் வீடு தேடி ஸ்டிக்கர்கள் ஒட்டி, தமிழ்நாடு வெற்றிக் கழகத் தொண்டர்கள் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் கருத்துகளையும் திரட்டித் தலைமைத்துவத்திற்கு நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மேலும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் கட்சி செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது வரை 80 இலட்சம் பேருக்கு மேலானவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை விரைவில் 1 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, புதிய உறுப்பினர்களை இணைக்கவும், தனித்தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தவெக தனித்துவமாகதா அல்லது கூட்டணியாகதா தேர்தலுக்கு செல்லும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்திய செயற்குழுக் கூட்டத்தில் “விஜய் தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, “மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்” என்ற வாசகத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதன் கீழ், மாநிலம் முழுவதும் தவெக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, “2026 மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகத்துடன் விஜயின் புகைப்படமுள்ள ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். அதே நேரத்தில், கடந்த ஆட்சி நிலை, தற்போதைய ஆட்சியின் செயல்பாடு மற்றும் மக்களுடைய கோரிக்கைகள் குறித்தும் கருத்துகளை கேட்டறிந்து பதிவு செய்கின்றனர்.

இந்த பதிவுகள் அனைத்தும் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனைத் தவிர, சமூக ஊடகங்களில் ‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தையும் தவெக அதிகாரப்பூர்வமாக மெருகேற்றி வருகிறது.

Facebook Comments Box