அரை இறுதியில் சாட்விக் – ஷிராக் ஜோடி எளிதில் தோல்வியடைந்தது
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் சாட்விக் மற்றும் ஷிராக் ஜோடி பறிபோனது.
சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரை இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி, இரண்டாம் இடத்தில் உள்ள மலேசிய ஜோடி ஆரோன் ஷியா மற்றும் சோ வூ யிக் ஆகியோருடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 13-21, 17-21 என்ற நேரடி செட்களில் எதிரணிக்கிடம் தோல்வியடைந்து, போட்டியிலிருந்து வெளியேறினர்.
Related
Facebook Comments Box