இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் முழுமையாக ஈடுபட்டு ரசித்தார் பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முக்கோண விழா
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முக்கோண விழாவில் இசைஞானி இளையராஜா வழங்கிய ஆன்மிக இசை நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக கவர்ந்தது.
மத்திய கலாசார அமைச்சகத்தின் ஏற்பாட்டில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா மூன்று முக்கிய நிகழ்வுகளை கொண்டிருந்தது:
- சோழரசர் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை,
- பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய 1000வது ஆண்டு,
- தென்கிழக்காசியாவிற்குச் சென்ற இராஜேந்திர சோழனின் வெற்றிப் படையெடுப்பின் 1000வது ஆண்டு நிறைவு.
இவ்விழாவின் இறுதிநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றார்.
பிரதமரின் வருகையையொட்டி, கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தேவார மற்றும் திருவாசக பாடல்களை ஓதுவார்கள் குழுவினர் இசைத்தனர்.
இதற்குப் பின் இசைஞானி இளையராஜா வழங்கிய ஆன்மிக இசை நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் இடம்பற்ற ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. இந்த இசையை பிரதமர் மோடி கைகளால் தாளம் போட்டு மெய்மறந்து ரசித்தார்.
அதன் பின்பு, இளையராஜா இசையமைத்த திருவாசகம் ஆல்பத்தில் இடம்பற்ற ‘மாசற்ற ஜோதி’ என்ற பாடலை அவர் நேரில் பாடினார்.