சாம்சங் நிறுவனம் உற்பத்தி நடவடிக்கையை இந்தியாவுக்கு மாற்ற திட்டம்

சாம்சங் நிறுவனம் உற்பத்தி நடவடிக்கையை இந்தியாவுக்கு மாற்ற திட்டம்

செல்போன்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம், தற்போது வியட்நாமில் உள்ள உற்பத்தி நடவடிக்கைகளை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

வியட்நாமிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 46% வரி விதித்து வருகிறது. அதேசமயம், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 10% மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தியை விரிவுபடுத்த சாம்சங் எண்ணி வருகிறது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறது. வரிவீதித் தளர்வுகள் மற்றும் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில், இந்த உற்பத்தி மையங்களில் செயல்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Facebook Comments Box