பெய்ஜிங்கில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 44 பேர் உயிரிழப்பு
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்து பரவலாக பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரின் பல தாழ்வான பகுதி வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் விளைவாக 80,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தனர். 136 கிராமங்களில் மின்சார வழங்கல் துண்டிக்கப்பட்டது. மேலும், 30-க்கும் அதிகமான சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த சூழ்நிலையை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்பில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளனர்.
பெய்ஜிங் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகளால் சூழப்பட்ட மியூன் மற்றும் யான் கிங் ஆகிய மாவட்டங்களில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
முந்தைய திங்கட்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வெள்ள நெருக்கடியில் சிக்கிய பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கினார்.
பெய்ஜிங் உட்பட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 9 பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, சீன நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்குடன், சீன தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணையமும் நிதி ஒதுக்கியுள்ளது.