அமெரிக்க போர் விமானங்களை ஏற்க இந்தியா தயக்கம் காட்டியது ஏன்?
அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான F-35-ஐ இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பலமுறை அழுத்தம் வந்த நிலையில், இந்திய அரசு அதை முற்றிலும் நிராகரித்துள்ளது. இதற்குப் பதிலாக, தேசத்திலேயே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை போர் விமானமான தேஜஸ் Mk2-க்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான 25% வரியை அறிவித்துள்ளார்.
2027-க்குள் இந்திய விமானப்படையில் புதிய தலைமுறை போர் விமானங்களை சேர்க்கும் திட்டத்தின் கீழ் தேஜஸ் Mk2 உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் F-35 சிறந்த ஸ்டெல்த் விமானமாக இருந்தாலும், தேஜஸ் Mk2-இல் பொருத்தப்பட்டுள்ள பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் F-35-இல் இல்லாதவை என கூறப்படுகிறது.
F-35-இல் 43,000 பவுண்ட் த்ரஸ்ட் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேஜஸ் Mk2-இல் அதைவிட வலிமையான GE F414 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
F-35–இன் அதிகபட்ச வேகம் Mach 1.6 (மணிக்கு சுமார் 1,960 கி.மீ) ஆகும். ஆனால் தேஜஸ் Mk2–இன் உந்துசக்தி 98 கிலோநியூட்டன், வேகம் Mach 1.8 (மணிக்கு சுமார் 2,205 கி.மீ) என அதிகமாக உள்ளது.
F-35–இன் முக்கிய தன்மையாகும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் அதன் ரேடார் கண்ணுக்குத் தெரியாத சிறிய உருவாக்கம் (0.005 மீ²) வாயிலாக செயல்படுகிறது. இது எதிரியின் கட்டுப்பாடுகளுக்குள் நுழைய உதவுகிறது.
ஆனால் தேஜஸ் Mk2-இல் canard wings போன்ற தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வடிவமைப்புகள் மூலம் அதேபோல் ரேடாரில் தவிர்க்கும் திறனும், அதிகச் சுறுசுறுப்பும் உள்ளது.
F-35-இல் உள்ள Active Electronically Scanned Array (AESA) ரேடார், 360° கேமரா, மற்றும் தரவு ஒருங்கிணைப்பு வசதிகள் விமானிகளுக்கு மேம்பட்ட சூழ்நிலை அறிவாற்றலை வழங்குகின்றன. ஆனால் தேஜஸ் Mk2-இல் பயன்படுத்தப்படும் உத்தம் AESA ரேடார், infrared search and track system, மற்றும் smart cockpit வசதிகள் மூலம் பல இலக்குகளை ஒரே நேரத்தில் திறம்பட கண்காணிக்க முடிகிறது.
இதனால், உலகளாவிய ரீதியில் அடுத்த தலைமுறை போர் விமானங்களில் தேஜஸ் Mk2 மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. F-35 சுமார் 8,160 கிலோ ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. ஆனால் தேஜஸ் Mk2–இன் மேக்சிமம் ஆயுத சுமை 6,500 கிலோ ஆகும்.
தூர அடிப்படையில், F-35 ஆயுதங்களுடன் 1,500 கி.மீ வரை பறக்க முடியும். வெறும் விமானமாக 2,200 கி.மீ வரை செல்லும். அதேசமயம், தேஜஸ் Mk2 3,000 கி.மீ தூரத்திலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் பெற்றது. மேலும், ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியும் இதில் இருக்கிறது. எனவே தீவிர தாக்குதல், நீண்ட தூர ரோந்து ஆகியவை சுலபமாக நடக்க முடிகிறது.
விலை குறித்து பேசினால், ஒரு F-35A விமானத்தின் விலை சுமார் 82.5 மில்லியன் டாலர்; F-35B பதிப்பின் விலை 109 மில்லியன் டாலர். ஆனால் தேஜஸ் Mk2 விமானத்தின் யூனிட் விலை 60 மில்லியன் டாலர் மட்டுமே.
சிறந்த செயல்திறன், அதிக வேகம், குறைந்த செலவு – இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியா, F-35-ஐ வாங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
TEJAS Mk2 திட்டம் நிலைபெற்று விரைவாக முன்னேறி வருகிறது. 2025 இறுதிக்குள் முன்மாதிரி மற்றும் தரை சோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், 2026-இல் முதல் தயாரிப்பு விமானம் விமானப்படையில் இணைக்கப்படும்.
இந்த முன்னேற்றம், பாதுகாப்பு தன்னிறைவு நோக்கில் இந்தியாவின் உயர்வையும், அடுத்த தலைமுறை விமானத் துறையில் நாட்டு தயாரிப்புகளின் வலிமையையும் வெளிக்காட்டுகிறது. ரஷ்ய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானங்களுடன் போட்டியிடும் வகையில் தேஜஸ் Mk2 உருவாகி வருகிறது.