பிஎஸ்என்எல் 4ஜி சுதந்திர தின சலுகை திட்டம் அறிமுகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைக்கான ரூ.1 சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் வழங்கும் 4ஜி சேவையை ஒரு மாதம் முற்றிலும் இலவசமாக சோதித்து பயன்படுத்தும் வாய்ப்பை, ரூ.1-க்கு வழங்கப்படுகின்றது. இது, நாட்டின் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் உள்ளூர் தயாரிப்பான 4ஜி தொழில்நுட்பத்தை மக்கள் அனுபவிக்க வழிவகுக்கும் வகையில் இந்த சலுகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தில், எல்லையில்லா வாய்ஸ் கால் வசதி (லோக்கல் / எஸ்டிடி), தினமும் 2 ஜிபி வரை அதிவேக டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள், மேலும் பிஎஸ்என்எல் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா நடைபெறும் இடங்களுக்குச் சென்று இந்த சுதந்திர தின சலுகையைப் பெறலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box