ஏஐ மூலம் மாறிய ‘ராஞ்சனா’ திரைப்பட முடிவுக்கு: நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவிப்பு
‘ராஞ்சனா’ திரைப்படத்தின் முடிவுப் பகுதியில் ஏஐ மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை நடிகர் தனுஷ் கண்டித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘ராஞ்சனா’, இயக்குநர் ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவானது. இதன்மூலம் தனுஷ் இந்திப் படத் துறையில் அறிமுகமானார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, சோனம் கபூர் கதாநாயகியாக நடித்திருப்பது போன்ற அம்சங்களால் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
தற்போது இந்தப் படத்தை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களுடன் மீண்டும் வெளியிட்டு வருகிறது. இதற்காக, திரைப்படத்தின் முடிவுப் பகுதிக்கு ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது படத் தயாரிப்புப் பிரிவை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
சமீபத்தில், இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ஆனந்த் எல். ராயும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், தற்போது நடிகர் தனுஷும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமாக மாற்றிய புதிய முடிவுடன் ‘ராஞ்சனா’ திரைப்படம் மீண்டும் வெளியானது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
இந்த மாற்றப்பட்ட காட்சி, படத்தின் மூலக் கோளாற்றினை பிகர்த்து விட்டது. எனது தெளிவான எதிர்ப்பைக் கடந்து, படக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
12 வருடங்களுக்கு முன் நான் ஒப்புக் கொண்ட படம் இதுவல்ல.
திரைப்படங்கள் மற்றும் கலைக்கூறுகளை ஏஐ மூலம் மாற்றுவது என்பது கலை மற்றும் கலைஞர்களுக்கே ஆபத்தான நிலையை உருவாக்குகிறது.
இது கதை சொல்லும் பாங்கின் நம்பகத்தன்மைக்கும் சினிமாவின் பாரம்பரியத்திற்கும் நேரடி ஆபத்தாக இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த கடுமையான விதிகளும் சட்டங்களும் அமல்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.