அமெரிக்காவில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாகக் கண்டெடுப்பு
அமெரிக்காவில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என உறுதியாகியுள்ளது. இந்திய வம்சாவழி வீரர்கள் கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய நால்வரும் நியூயார்க் நகரில் குடியமர்ந்திருந்தனர்.
இவர்கள் கடந்த வாரம் மேற்கு வர்ஜினியாவின் மார்ஷல் கவுண்டியில் அமைந்துள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆப் கோல்ட் எனப்படும் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு தங்களின் காரில் பயணித்துள்ளனர். ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு அவர்கள் தொடர்புக்கு வந்திருக்கவில்லை என உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து ஓஹியோ மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தவகையில் பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியது ஆகஸ்ட் 2-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டதாக மார்ஷல் மாவட்ட அதிகாரியான மைக் டவுகெர்டி தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.