லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் அனிருத் சந்திரசேகர் ஆகியோரின் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் அமைந்துள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில், ராம்குமார் – அனிருத் ஜோடி 6–4, 6–4 என்ற நேரடி செட்களில் சீன தைபே நாட்டைச் சேர்ந்த யூ ஹிசியூ ஹுசு – ரே ஹோ ஹுவாங் ஜோடியை தோற்கடித்து வெற்றியைப் பெற்றது.
Facebook Comments Box