டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி

பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் லாடர்ஹில் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சல்மான் அகா 38 ரன்கள், ஹசன் நாஸ் 40 ரன்கள், பகர் ஸமான் 20 ரன்கள் எடுத்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

133 ரன்கள் இலக்குடன் பதிலுக்கு விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் 21 ரன்கள், மோட்டி 28 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 16 ரன்கள், ரொமாரியோ ஷெப்பர் 15 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது. தீர்மானகரமான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்றே (ஆகஸ்ட் 2) லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

Facebook Comments Box