மத்திய அரசு நடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநில மாநாடு, நடந்தது. இதற்காக, தமிழக சட்டப்பேரவை அலுவலக தோற்றத்தில், மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்;- அதிமுக, பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.
நாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. மத்திய அரசு நடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. 
சேலம் சென்னை விரைவு சாலை திட்டப்பணிகள் 2021-2022ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது என கூறியுள்ளார்.
Facebook Comments Box