பிரம்மோஸ் Vs டோமாஹாக்: க்ரூஸ் ஏவுகணைகளின் போட்டி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் விமானத் தளங்களை துல்லியமாக தாக்கிய இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணையை மிஞ்சி உலக நாடுகளின் கவனத்தை பெற்றது. இவை பற்றிய ஒப்பீட்டு தொகுப்பு:

இன்றைய யுத்தத் தொழில்நுட்பங்களில், மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட க்ரூஸ் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விமானிகளுக்கு ஆபத்து ஏற்படாமல், வெற்றியை உறுதி செய்யும் வகையில் இவைகள் செயல்படுகின்றன.

தொடக்கத்தில், உலகளவில் முக்கிய ஏவுகணையாக இருந்தது அமெரிக்காவின் டோமாஹாக். ஆனால், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணை, அதற்குச் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. சீனாவின் வான்வழி பாதுகாப்பை ஊடுருவி, பாகிஸ்தான் விமானத் தளங்களை அழித்தது, இந்த ஏவுகணையின் ஆற்றலை உலகுக்கு தெளிவாக காட்டியது. இதனையடுத்து பல நாடுகள் இந்திய ஏவுகணையை வாங்கும் முயற்சியில் இறங்கின.

விலை மற்றும் செயல்திறன்:

  • டோமாஹாக் ஏவுகணையின் விலை சுமார் ₹16.6 கோடி.
  • பிரம்மோஸ் ஏவுகணையின் விலை ₹34 கோடி வரை.

    உயர்ந்த விலை இருந்தாலும், பிரம்மோஸின் செயல்திறன் வியக்கத்தக்கது.

வேகம் மற்றும் செயல்பாடு:

  • பிரம்மோஸ்: Mach 3.0 (ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 3 மடங்கு வேகம்).

    இதனால் எதிரியின் ரேடார் அதை கண்டறிய முன்பே இலக்கை தாக்க முடியும்.

  • டோமாஹாக்: Mach 0.74 (Subsonic).

    தரையின் மேல் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எதிரியின் ரேடார்களைத் தவிர்க்கும் திறன் உடையது.

தாக்கும் தூரம்:

  • டோமாஹாக் – 2,400 கிமீ வரை தாக்கும் திறன்.
  • பிரம்மோஸ் – தற்போது 800 கிமீ வரை மட்டுமே தாக்கும் திறன் கொண்டது, ஆனால் விரைவில் 1,500 கிமீ வரை அதிகரிக்கப்படும்.

வழிகாட்டும் தொழில்நுட்பம்:

  • டோமாஹ்: GPS, Inertial Navigation, Terrain Matching, Digital Scene Matching உள்ளிட்ட பல அடுக்கு வழிகாட்டல்.
  • பிரம்மோஸ்: GPS வழிகாட்டல், ரேடார் ஹோமிங் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் வழிகாட்டல் மற்றும் செயலில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்கும் திறன்.

பயன்பாடு மற்றும் வரலாறு:

  • 1991 முதல் வளைகுடா போரில் டோமாஹாக் ஏவுகணை 2,300 முறைப் பயன்படுத்தப்பட்டது.
  • பிரம்மோஸ், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அதிரடி தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது.

புதிய அப்டேட்கள்:

  • Mach 8 வேகத்தில் பயணிக்கும் புதிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட இருக்கிறது.
  • அதேபோல், Mach 3 வேகத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் டோமாஹாக் ஏவுகணையும் தயாராகிறது.

சர்வதேச நிலை:

முன்பு அமெரிக்காவின் நட்பு நாடுகள் எல்லாம் டோமாஹாக்கை தேர்ந்தெடுத்துவந்தனர். ஆனால் தற்போது, வியட்நாம் முதல் எகிப்து வரை பல நாடுகள் இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

முடிவில்:

எந்த ஏவுகணை சிறந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு நாடின் பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றது எது என்பதுதான் கேள்வி. இந்தியா, தனது ஏவுகணைகளை உலக நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்துவிட்டது. இது, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்கு ஒரு நேரடி சவாலாகும்.

Facebook Comments Box