திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று வரலட்சுமி விரத விழா சிறப்பாக நடைபெறுகிறது

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் கோயிலில் இன்று வரலட்சுமி விரத விழா சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு கோயில் மாட வீதிகள் முழுவதும் அழகிய வண்ணக் கோலங்கள் தீட்டப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றன.

வரலட்சுமி விரத தினமான இன்று காலை, தாயாருக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், காலை 10 மணி முதல் 12 மணி வரை பெண்கள் பங்கேற்கும் வரலட்சுமி விரதச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டிய டிக்கெட்டுகள் முன்கணிக்கையாகவே விற்று முடிந்துவிட்டன.

இந்த விழா திருச்சானூர் கோயிலுக்கு மட்டுமல்லாமல், திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் 51 கோயில்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்காக பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம், வளையல்கள் மற்றும் அட்சதை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

பக்தர்கள் வசதிக்காக ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வரிசை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதானம் மற்றும் லட்டு பிரசாத விநியோகமும் சிறப்பாக நடைபெறுகிறது. தேவஸ்தானத்தின் தகவலின்படி, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா குழுவினர் தினமும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box