மரக்காணம் – புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடியில் நான்கு வழிச்சாலை – மத்திய அரசின் ஒப்புதல்

தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையிலான 46 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது சென்னை – புதுச்சேரி – விழுப்புரம் – நாகப்பட்டினம் வழித்தடத்தில் இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிகரித்து வரும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சாலை அடிக்கோடுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, மரக்காணம் – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 332A, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையிலான 46 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டம், இரண்டு முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட இருப்பதால், தமிழகம் முழுவதும் பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.

மேலும், புதுச்சேரி மற்றும் சின்னபாபு சமுத்திரம் பகுதிகளில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள், சென்னை – புதுச்சேரி பகுதிகளில் உள்ள இரண்டு விமான நிலையங்கள், கடலூரில் உள்ள ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பல்வேறு வகை போக்குவரத்து வழித்தடமாக இந்த நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Facebook Comments Box